மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 16 மார்ச் 2021 அன்று காலை 9.3௦ மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் 2021இல் அனுமதி கிடைக்கப்பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள், நடைபெற்று கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு போன்ற பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது வைத்தியர் பற்றாக்குறை, அதற்கான ஆளணி விடயங்கள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட கொடுப்பனவில் செலுத்தப்படாதுள்ள மிகுதி கொடுப்பனவு தொடர்பான விடயங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், காணி உரிமப்பத்திரம் தொடர்பான பிரச்சனைகள், பொது போக்குவரத்து தரிப்பிட பிரச்சனை என பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது. குறிப்பாக கழிவுப்பொருட்களை மீள்சுழற்சி செய்வதற்கான முறையான திட்டம் ஒன்றினை தயாரித்து செயற்படுத்த உள்ளுராட்சிசபை பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் திட்டங்களை அமுல்படுத்தி செயற்படுத்துபவர்கள், அத்திட்டங்கள் தொடர்பாக திணைக்களங்களுடன் இணைந்து செயலமர்வுகளை நடாத்தி திட்டங்களை செயற்படுத்த வேண்டுமென அனைத்து தரப்பினருக்கும் கௌரவ ஆளுநரால் ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார தொண்டர்களின் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் குறித்த பிரச்சனையை தான் அதிமேதகு ஜனாதிபதியிடம் சமர்பிப்பதாகவும், ஜனாதிபதியால் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமையவே மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார். மேலும் இனிவரும் காலங்களில் சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள், கட்டடங்கள் கட்டுவதை மட்டும் நோக்காக கொள்ளாமல் தேவைகளுக்கேற்ப குறித்த திட்டங்களை செயற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், திலீபன்,வினோ நோகரதலிங்கம் மற்றும் ஆளுநரின் செயலாளர், இணைப்பு செயலாளர், பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், மாவட்ட திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டனர்.

Best Slot Machine Games List (2023)