மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவை – பெப்ரவரி

தற்பொழுது கால போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளால் இடைப்போகப் பயிர்ச்செய்கைக்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இவ் இடைப்போகச் செய்கைக்கான மறுவயல் பயிர் விதைகள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் நடமாடும் சேவையின் ஊடாக விற்பனை செய்ப்பட்டு வருகின்றது.

நடமாடும் விற்பனையில் தேவையான விதைகள், மரக்கறி நாற்றுக்கள், பழ மரக்கன்றுகள், மற்றும் சேதன விவசாயத்திற்கான திரவ பசளை மற்றும் தாவர பீடை நாசினி போன்றன விற்பனை செய்யப்படுவதுடன் பயிர்ச் சிகிச்சை முகாம் உள்ளிட்ட விவசாயம் தொடர்பான சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

மாசி மாதம் நடைபெறவுள்ள நடமாடும் சேவைவிபரம்