மாற்றுவலுவுடையோர் தினம் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் கொண்டாடப்பட்டது

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் சர்வதேச மாற்றுவலுவுடையோர் தின விழாவானது 06.12.2024ம் திகதி சரஸ்வதி மண்டபத்தில் சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினர்களாக திருமதி எழிளரசி பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வடக்கு மாகாணம் அவர்களும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி திரு சு.சுரேந்திரகுமாரன் அவர்களும் கலந்து கொண்டனர். மாற்றுவலுவுடையோர் தின விழாவானது மாற்றுவலுவுடைய உற்பத்தியாளர்களின் கண்காட்சி மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

சமூக சேவைத் திணைக்களப் பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா அவர்களின் வரவேற்புரை மற்றும் தலைமையுரை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து திருமதி எழிளரசி பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வடக்கு மாகாணம், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி திரு R.சுரேந்திரகுமாரன் ஆகியோர்களால் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மாற்றுவலுவுடையோர் தின மாநாடு ஆரம்பமாகியது இம் மாநாட்டில் வைத்தியர் திரு ளு.P.ஆதீத்தன், சட்டவாளர் திரு ளு. தருமதன், விரிவுரையாளர் திரு. னுச.சு. வள்ளுவன்;, உதவி விரிவுரையாளர் திருமதி T.N.இஸ்ரா, ஆலோசகர் திரு S. சங்கர் சுப்பையா ஆகியோர் பேச்சாளர்களாக கலந்து கொண்டதுடன் செல்வி வாணி சுரேந்திரன் (CBM) நிகழ்நிலை மூலம் கலந்துகொண்டார். அத்துடன் இம் மாநாட்டின் ஒருங்கியைப்பாளர்களாக ஓய்வுநிலை நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன், பேராசிரியர் P.A கூஞ்ஞே மற்றும் வைத்திய கலாநிதி S.ஸ்ரீகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

மாற்றுவலுவுடையோர் மாநாடு முடிவடைந்ததும் மதிய போசனத்துடன் மாற்றுவலுவுடையோரின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து சிறந்த மாற்றுவலுவுடையோர் இல்லங்கள், சிறந்த மாற்றுவலுவுடையோர் பாடசாலைகள், சிறந்த பிரதேச மட்ட மாற்றுவலுவுடையோர் சங்கங்கள், சிறந்த சுயதொழில் முயற்சியாளர், சிறந்த மாற்றுவலுவுடையோருக்கு தொழில் வழங்குனர், சிறந்த மாற்றுவலுவுடையோருக்கு தொழில் வழங்கும் நிறுவனம், சிறந்த புத்தாக்கத்துடனான தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர், சிறந்த முன்மாதிரியான மாற்றுத்திறனாளி, சிறந்த படைப்பாற்றலுடைய சிறுவர் மாற்றுத்திறனாளி, மற்றும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இறுதியாக திணைக்கள உதவிப்பணிப்பாளர் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. இறுதியாக இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அன்பளிப்பு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் விழா இனிதே நிறைவடைந்தது.