போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம்

மேற்படி நிகழ்வானது போக்குவரத்து அதிகாரசபையில் ஏற்கனவே தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் சேவையாற்றிய முகாமைத்துவ உதவியாளர் மற்றும் நேரம் கணிப்போர் ஆகியோருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 27 ஒக்ரோபர் 2020 அன்று  12.3௦ மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் திருமதி.ச.மோகநாதன், உதவிச் செயலாளர், போக்குவரத்து அதிகாரசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வடமாகாண ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில் மிக முக்கியமான பல சிரமத்துக்கும் சிக்கல்களுக்கும் மத்தியிலேதான் நான் இந்த நியமனத்தை வழங்க அனுமதித்திருந்தேன். தனியார் போக்குவரத்து துறையினர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கபடுகின்றன. இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்து சபையினருக்குமிடையே  காணப்படும் முரண்பாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது. இந்த இரு துறையினருக்குமிடையே காணப்படும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒருங்கிணைந்த சேவையை வழங்கவேண்டுமெனவும் அந்நேர அட்டவணையின்படி சேவைகள் நடத்தப்படுகிறதா உறுதிப்படுத்துமாறும் கேட்டுகொண்டார். இவை சம்பந்தமாக ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின் அதற்க்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள்  தலைவரும் அவர்சார்ந்த உத்தியோகத்தருமே. அத்தோடு தமது கடமைகளை நேர்மையுடன் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.