பெரும் போகம் 2019 / 2020 இற்கான விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் – வடமாகாணம்

Best Tennessee Online Casinos of 2023

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் கடந்த சிறு போகத்தைப் போன்று இக்கால போகத்திலும் (பெரும் போகம்) மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்ட மானது அமுல்படுத்தப் பட்டுள்ளது. விவசாயத் துறை மீதான இளைஞர்களின் ஆர்வம் குறைந்து வருவதாக கருதப்படுகின்ற இக்காலகட்டத்தில் பெரும் போக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு புத்துயிரளித்து இளையோரை விவசாயத்தில் நாட்டம் கொள்ளச் செய்கின்ற வகையில் மாகாண விவசாயத் திணைக்களமானது ஒக்டோபர் 7 தொடக்கம் ஒக்டோபர் 12 வரையான காலத்தை விசேட விவசாய ஊக்குவிப்பு வாரமாக பிரகடனம் செய்து ஏனைய துறை சார்ந்த திணைக்களங்களின் அனுசரனையுடன் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் விவசாய போதனாசிரியர் பிரிவு ரீதியாக அமுல்படுத்தியுள்ளது.

“ஆரம்ப மழையுடனே
அனைவரும் ஒருமித்து
பருவத்தே பயிரிட்டு
செழிப்பாக விளைவிப்போம்”

என்னும் தொனிப் பொருளுடனான இவ்விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் ஜந்து மாவட்டங்களிலும் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் விவசாய போதனாசிரியர் பிரிவு ரீதியாக பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன

விழிப்புணர்வு நிகழ்வுகள் வரிசையில்…

நெற் செய்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் கபிலத் தாவரத்தத்தி தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் கிளிநொச்சி மாவட்டத்திலும் மாமரச் செய்கையில் பரவலாக அவதானிக்கப்படும் கொப்புள ஈயின் தாக்கம் சம்மந்தமான விழிப்புணர்வு செயலமர்வு மன்னார் மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளது.

பருவ மழையுடன் பயன்தரு மரங்களை நடுகை செய்வதனை ஊக்குவிக்கும் விதமாக முறையான மரநடுகைத் தொழிநுட்பங்களை வெளிப்படுத்தும் முன்மாதிரிச் செய்கையுடனான விழிப்புணர்வு நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

விவசாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக பெருகிவரும் ஆக்கிரமிப்புக் களையாகிய பாதீனியம் தொடர்பில் விவசாயிகளிடையேயும் பொது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான பேரணி வவுனியா மாவட்டத்தில் நடாத்தப்பட்டுள்ளதுடன் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அடங்கிய பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தேனீ வளர்ப்பினை மேம்படுத்தும் நோக்கிலான பயிற்சி வகுப்பு உள்ளிட்ட விவசாயிகள் பயிற்சி வகுப்புகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடாத்தப்பட்டுள்ளன. துவிர நெற்செய்கை, பழப்பயிர்ச் செய்கை, சேதனப் பயிர்ச் செய்கைஇ படைப்புழுக் கட்டுப்பாடுமற்றும் களைமுகாமைத்துவம் உள்ளடங்கலாக பல்வேறு தலைப்புக்களின் கீழ் ஏனைய மாவட்டங்களிலும் பயிற்சிவகுப்புக்கள் நடைபெற்றுள்ளன.

விவசாயிகள் பயிற்சிவகுப்பு : தேனிவளர்ப்பு உலுக்குளம், வவுனியா

விவசாயிகள் பயிற்சிவகுப்பு : மாமரச்செய்கை. பாவற்குளம், வவுனியா

வயல்விழா: ரொம்.ஈ.ஜே.சிமா மரச்செய்கை. சிலாவத்தை முல்லைத்தீவு

மேலும் நடமாடும் சேவைகளும் குறித்த விவசாய ஊக்குவிப்பு வாரத்தில் அதிகளவில் முன்னெடுக்கப் பட்டுள்ளன. இந்நடமாடும் சேவைகளில் விதைஇ நடுகைப் பொருட்கள் விற்பனையும் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் எதிர்நோக்கும் தொழிநுட்ப பிரச்சினைகள் தொடர்பிலான தீர்வுகளை வழங்கும் பயிர்ச்சிகிச்சை முகாம்களும் அனைத்து பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணி மனைகளைச் சேர்ந்த விவசாய போதனா சிரியர்களாலும் பிரதேச ரீதியாக நடாத்தப்பட்டுள்ளன. தவிர இவ்வாரத்தில் வயல் விழா நிகழ்வுகளும் பரவலாக நடாத்தப்பட்டுள்ளன.

நடமாடும் விற்பனை சேவையும் பயிர்ச் சிகிச்சை முகாமும் – ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.

மரநடுகை விழிப்புணர்வு நிகழ்வு – புத்தூர், யாழ்ப்பாணம்.

நெற் செய்கை கபிலத்தத்தி தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி – இராமநாதபுரம், கிளிநொச்சி

Free Spins BetRivers Casino Michigan Promo Code September 2023

காளான் பெறுமதிசேர்ப்பு தொடர்பான பயிற்சிவகுப்பு – கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி

கற்றாழைச் செய்கை வயல்விழா – தரவன் கோட்டை, மன்னார்

விவசாயிகள் பயிற்சிவகுப்பு : தேனிவளர்ப்பு, மன்னார்

நிகழ்வுகளின் தொகுப்பு
விழிப்புணர்வு நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா மொத்தம்
விழிப்புணர்வு நிகழ்வுகள் 5 3 1 6 15
விவசாயிகள் பயிற்சிவகுப்பு 14 25 12 9 5 65
நடமாடும் விற்பனை சேவையும் பயிர்ச்சிகிச்சை முகாமும் 5 3 1 1 10
வயல்விழா 2 3 1 2 8
மொத்தம் 26 34 14 12 12 98