பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (07) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதனடிப்படையில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த 39.95 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதுடன் அவற்றில் பொதுமக்களுக்கு சொந்தமான 21.24 ஏக்கர் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் உரிமையாளர்களிடம் கௌரவ ஆளுநர் அவர்களினால் கையளிக்கப்பட்டது.