நீண்டகால பிரச்சினைக்கான தீர்வை காணும்நோக்கில் காணி உறுதிகளை மேன்மை தங்கிய ஜனாதிபதி வழங்குவதாகவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1286  பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 372   பயனாளிகளுக்கான காணி உறுதிகள், மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று (24/06/2024) கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் என   பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Massachusetts Gambling Sites - Best MA Online Casinos 2023

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், நாட்டு மக்கள் மிக நீண்டகாலமாக எதிர்நோக்கிய காணிக்கான உரிமம் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் மேன்மை தங்கிய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளமை சிறப்பான விடயம் என கூறினார். மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கனவு திட்டமான இந்த அழகான திட்டத்தின் பயனாளர்கள் இதன் பயனை தமது அடுத்த சந்ததியினருக்கும் கொண்டு செல்லும் வகையில் செயற்பட வேண்டும் என கூறினார். அத்துடன், எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வடக்கு மாகாணத்திலுள்ள 5000 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.