நாடு பூராகவும் உள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு விவசாய தொழிலுட்ப பயிற்சி வழங்குபவர்களுக்கான பயிற்சி

Real Money Gambling Games You Can Play Online For Free

நாடு பூராகவும் உள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு தொழிநுட்பம் தொடர்பான அறிவூட்டுபவர்களுக்குமான பயிற்சியானது ஐந்து தலைப்புகளின் கீழ் 25 நாட்கள் (2021.01.04 – 2021.02.05) வெவ்வேறு பயிற்சி நிலையங்களில் நடைபெறுகின்றன. அதன் பிரகாரம் இப்பயிற்சிக்காக வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் 3 தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் வீதம் 15 தொழிநுட்ப உத்தியோகத்தர்களும், மற்றும் கிழக்கு மாகாணம், மாகாண இடைவலய பிரதேசம், மகாவலி வலயம் என்பவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 35 பயிற்றுவிப்பாளர்கள் உள்ளடங்கலாக 50 தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வானது அநுராதபுரத்தில் அமைந்துள்ள பண்ணை இயந்திர பயிற்சி நிலையத்தில் 04.01.2021 ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இவ் ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக பின் தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டின் இராஜங்க அமைச்சர் கௌவர சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் அவ் அமைச்சின் செயலாளர் திரு. ஏ.செனநாயக்க அவர்களும், வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு. சி.சிவகுமார், கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.எஸ்.எம்.குஷைன், மாவட்ட விவசாயப்பணிப்பாளர் திருமதி. எல்.தேனுவாரா, அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திரு.எம்.எஸ்.ஏ.சன்னிர், காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. எம்.ஜெகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இப் பயிற்சி நெறியானது ஐந்து தலைப்புகளின் கீழ் தலா ஐந்து நாட்கள் வீதம் 25 நாட்களிற்கு நடைபெறும். ஒவ்வொரு தலைப்புகளின் கீழான பயிற்சி நெறிகள் வெவ்வேறு பயிற்சி நிலையங்களில் நடைபெறுகின்றன.

பயிற்சி நெறி பயிற்சி நிலையம்
பழப்பயிர்கள்/எண்ணெய் பயிர்கள்தொடர்பான பயிற்சி சேவைக்கால பயிற்சி நிலையம், அங்குனுகொலபலச
மரக்கறிபயிர்ச்செய்கை/ சிறந்த விவசாயநடைமுறைகள்/ பயிர் பாதுகாப்பின் கீழானபயிர்ச்செய்கை தேனீவளர்ப்புதொடர்பான பயிற்சி சேவைக்கால பயிற்சி நிலையம், பிந்துவெவ
மறுவயற்பயிர்ச் செய்கை தொடர்பானபயிற்சி சேவைக்கால பயிற்சி நிலையம், மகாஇலுப்பல்லம
நெற் செய்கை தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம், பத்தலகொட
பண்ணை இயந்திரங்கள் / வீட்டுத்தோட்டம் / நீர்பாசனம் தொடர்பான பயிற்சி பண்ணை இயந்திரங்கள் பயிற்சி நிலையம், அநுராதபுரம்

இப் பயிற்சி நெறியானது நான்கு கட்டங்களாக ஏனைய விவசாயப் போதனாசிரியர்களுக்கும் நடைபெறவுள்ளது.