தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகர பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 17 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (DYB) பயிற்சி நெறியானது 15.02.2024 தொடக்கம் 17.02.2024 வரை 3 நாட்கள் வவுனியா நகர பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.கொ.அன்ரன் ஜெகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் முதன்மை வளவாளராகவும் திரு.ப.ராகவன், தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இந் நிறைவு நிகழ்வில் வவுனியா நகர பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளரும் கலந்து கொண்டு முயற்சியாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டதுடன் மேலதிக உதவிகளுக்கு பிரதேச செயலகத்தை நாடுமாறும் கேட்டுக்கொண்டார்.
இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு தொழில் யோசனைகளை கண்டறிந்து அவற்றில் இருந்து மிகப்பொருத்தமான ஒரு தொழில் யோசனையை பயிற்சியின் நிறைவின் போது தெரிவு செய்து அத்தொழிலினை ஆரம்பிப்பதற்கான ஆலோசனையுடன் இப் பயிற்சி நெறியானது நிறைவு பெற்றது.