தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சங்கானை

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சங்கானை பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 19 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல (GYB) பயிற்சி நெறியானது 20 செப்ரம்பர் 2023 தொடக்கம் 22 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் சங்கரத்தையில் உள்ள மகளிர் அபிவிருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.இ.தவகுமாரன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.பு.கயலவன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர்.

இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் பல்வேறு தொழில் யோசனைகளின் சாதக பாதக நிலைகளை கண்டறிந்து அவற்றில் இருந்து மிகப்பொருத்தமான ஒரு தொழில் யோசனையை பயிற்சியின் நிறைவின் போது தெரிவு செய்து அத்தொழிலினை ஆரம்பிப்பதற்கான தமது விருப்புடனும் வளவாளர்களது ஆலோசனையுடனும் இப் பயிற்சி நெறியானது நிறைவு பெற்றது.