தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் – வர்த்தகச் சந்தை –2023 Under ILO LEED+ Project

வடமாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களினுடைய உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை மேம்படுத்தும் நோக்குடன் ILO LEED+ செயற்திட்டத்தின் நிதி பங்களிப்புடன் வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால்  ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2023 நிகழ்வானது கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் மார்ச் மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரை நடைபெற்றது.

இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை மற்றும் கைப்பணி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 65 விற்பனைக் கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் இதில் கிளிநெச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 71 தொழில் முயற்சியாளர்களும், வவுனியா மாவட்டதைச் சேர்ந்த 01 முயற்சியாளரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 14 முயற்சியாளர்களும் உள்ளடங்கலாக மொத்தமாக 86 தொழில் முயற்சியாளர்கள் பங்குபற்றி தமது உற்பத்திகளை விற்பனை செய்தனர்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர்  மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் ஈடுபட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் மொத்த விற்பனை புரள்வானது 2.71 மில்லியன் ரூபா வாகக் காணப்பட்டமை சிறப்பம்சமாகும்.