யாழ். மாவட்டச் செயலகத்தில் 13.12.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை மீன்பிடி, நீர்வாழ் உயிரின மற்றும் கடல் வள அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ். மாவட்டச் செயலகத்தில் அழைப்பின் பேரில் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.இளங்குமரன், இ.அருச்சுனா, ச.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன் ஆகியோரும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் திணைக்களத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.