‘சில்ப அபிமானி’ 2023 தேசிய கைப்பணிப் போட்டி

கைப்பணியாளர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் வருடாந்தம் தேசிய ரீதியில் நடாத்தப்படும் மேற்படி போட்டிக்கான மாகாண மட்டப் போட்டி வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 15,16ம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் நடாத்தப்பட்டது.

இப்போட்டியில் வடமாகணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கைப்பணிவேலைகளில் ஈடுபடும் கைப்பணியாளர்களினால் வடிவமைக்கப்பட்ட 1105 கைப்பணி ஆக்கங்கள் போட்டிக்காக காட்சிப்படுத்தப்பட்டு தேசிய அருங்கலைகள் பேரவையின் நடுவர் குழுவினால் 313 ஆக்கங்கள் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டது இதில் 39 முதலாம் இடமும், 39 இரண்டாம் இடமும், 39 மூன்றாம் இடமும், 196 திறமைப் பரிசுக்குரிய ஆக்கங்களும் தெரிவாகியிருந்தன. இதில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற 117 ஆக்கங்கள் டிசம்பர் மாதம் 19,20ம் திகதிகளில் கொழும்பு ‘அபே கம’ வளாகத்தில் நடைபெறும் தேசிய போட்டிக்கு சமர்ப்பிக்கப்படும்.

தேசிய போட்டியில் தெரிவு செய்யப்படும் ஆக்கங்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

மாகாணமட்டப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற கைப்பணியாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு நவம்பர் மாதம் 28ம் திகதி காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீம் கவுஸ்) நடைபெறவுள்ளது.