சாட்டி கடற்கரைக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் சாட்டி கடற்கரைக்கு இன்று (18) காலை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

பொதுமக்கள் அதிகளவில் வருகை தரும் சுற்றுலாப்பகுதியான சாட்டி கடற்கரையினை சுத்தமாக பேணுமாறும் இப்பகுதியில் காணப்படும் பொதுமலசலகூடங்கள் பொதுமக்கள் பாவனைக்கு உகந்தவகையில் மாற்றியமைக்குமாறும் வேலணைப் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கும் ஆளுநர் அவர்கள் பணிப்புரை வழங்கினார்.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு