கௌபி அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வு

சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித் திட்டத்தின் (SAPP) கீழ் வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டத்தின் கீழ் கௌபீ பயிரின் அறுவடை விழா நிகழ்வானது கிளாலி விவசாயப் போதனாசிரியர் திருமதி.துர்க்காயினி திருக்குமரன் அவர்களின் தலைமையில் இந்திராபுரம் கிராமத்தில் கிறிஸ்தோபு ரகு எனும் பயனாளியின். தோட்டத்தில் 28.08.2020 ஆம் திகதி காலை 10:00 மணியளவில் இடம் பெற்றது.

கௌபீ பயிர்ச் செய்கையினை மாவட்ட மட்டத்தில் மேம்படுத்தி விரிவாக்கும் நோக்குடன் இச் செயற்றிட்டத்தினூடாக 1600 Kg வருணி எனும் குறுகியகால கௌபீ இனம் 100 ஏக்கர் விஸ்தீரணத்திற்கு 202 பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டிருந்தது. மேற்படி திட்டத்தனூடாக பயிரிடப்பட்ட கௌபீ பயிர்கள் விவசாயிகளினால் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.
சிறுபோகத்தில் சிறப்பாக பயிரிடப்படுகின்ற கௌபீ பயிரினை இடைப்போகத்திலும் பயிரிடலாம். வயல்களில் மீதியாகவுள்ள ஈரத்தன்மையினை பயன்படுத்தி குறுகியகால அவரையினங்களை செய்கை பண்ண முடியும். இந்தப் பயிர்களுக்குஅதிகளவான பராமரிப்போ அல்லது உழைப்போ தேவையில்லை. அத்துடன் விளை பொருட்களை அதிக விலைக்கு சுலபமாக விற்பனையும் செய்யமுடியும்.

சிறப்பாக நடைபெற்ற இவ்வயல் விழாவிற்கு பிரதம அதிதியாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திருமதி.பி.ஜெயராணி அவர்களும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் கிளிநொச்சி மாகாண விவசாயத் திணைக்களத்தினைச் சேர்ந்த SAPP திட்டத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர் திரு.சு.தர்மதேவன் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டு இவ் வயல்விழாவினை சிறப்பித்திருந்தனர்.

Best Casino Bonuses in Indiana with No Deposit Required (2023)