கொய்யாகாயினை ஐரோப்பிய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யும் முல்லைத்தீவு விவசாயி

Best Poker Rooms in Illinois - 2023 Rankings

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் கொய்யா செய்கை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் 2016 ஆம் ஆண்டு கொய்யாச் செய்கைக்காக Bangkok Giant என்ற கொய்யா இனக்கன்றுகள் விவசாயிகளிற்கு செய்கைக்காக வழங்கப்பட்டது.

பழம்பாசியினைச் சேர்ந்த சின்னத்தம்பி பிரபாகர் என்ற விவசாயி விவசாய திணைக்களத்தால் வழங்கப்பட்ட நாற்றுக்களுடன் தானும் மேலதிகமாக கொள்வனவு செய்து மொத்தமாக 1500 நாற்றுக்களை நாட்டி பராமரித்து வருகின்றார். மிகச்சிறப்பான முறையில் செய்கையினை மேற்கொண்ட இவ் விவசாயி 2019 ஆம் ஆண்டு மத்திய விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சிறந்த விவசாய நடைமுறைக்கான சான்றிதழைப் பெற்று (GAP-certificate) உற்பத்திகளை சந்தைப்படுத்தி வருகின்றார். இதன் காரணமாக அவரது உற்பத்திகளிற்கு கூடிய விலை கிடைக்கின்றது.

ஆரம்பத்தில் சராசரியாக 45-50 காய்கள் ஒருமரத்தில் விளைச்சலாகப் பெறப்பட்டது. தற்போது ஒருமரத்தில் 100-150 காய்களாக உற்பத்தி அதிகரித்துள்ளது. ஒவ்வொரு காய்களினதும் நிறையானது 250 கிராம்  -650 கிராம் வரை காணப்படுகின்றது.

இவ்விவசாயி தனது கொய்யா மரங்கள் மற்றும் காய்களைக் காட்டுயானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக தோட்ட வேலிக்கு வெளிப்புறமாக மின்சாரவேலியினை அமைத்துள்ளார் மற்றும் குரங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக தோட்டவேலியிலிருந்து உட்பக்கமாக 4 மீற்றர் தூரத்தில் மீன்பிடி வலையினை 6 அடி உயரத்திற்கு வேலியாக தோட்டத்தைச் சுற்றி அமைத்துள்ளார்.

உள்@ர் சந்தைகளிலும் காகில்ஸ் பல்பொருள் அங்காடிக்கும் பழங்களை 1 கிலோகிராம் ரூ.100.00 இற்கு விற்பனை செய்து வந்தார். தற்போது ஐரோப்பிய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய சான்றிதழினை மத்திய விவசாயத் திணைக்களத்திடமிருந்து பெற்று 1 கிலோகிராம் ரூ.160.00  எனும் விலையின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளார். வடக்கு மாகாணத்திலே இச்சான்றிதழ் பெற்ற முதலாவது விவசாயி இவரென்பது ஒரு சிறப்பம்சமாகும்.

இவரது விற்பனை நடவடிக்கையை வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பூ.உகநாதன் மற்றும் விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.