காணி விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாணகௌரவ ஆளுநர், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்னவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (05.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Awesome Blackjack Side Bets (With Payouts & Guide) - MintDice

வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, மீள்குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு விடுவிப்பது தொடர்பில் கௌரவ ஆளுநரினால் பாதுகாப்புச் செயலாளரிடம் எடுத்துக்கூறப்பட்டதற்கு அமைவாக, காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாம் பரிந்துரைகளை அனுப்புவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்ன, வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் இதன்போது உறுதியளித்தார்.