கனடா வாழ் தமிழ் வணிக சமூகம் – ஆளுநர் சந்திப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் மற்றும் கனடா வாழ் தமிழ் வணிக சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்பு ரொரன்டோ நகரில் 25 ஒக்ரோபர் 2019 அன்று இடம்பெற்றது .

வடமாகாணத்தில் தான் ஆளுநராக பதவியேற்றதிலிருந்து முன்னெடுத்து வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கனடா வாழ் வணிக சமூகத்திற்கு கௌரவ ஆளுநர் அவர்கள் விளக்கமளித்தார்.

வடமாகாணத்தில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி தொடர்பிலும் இதன்போது தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு கனடா வாழ் வணிக சமூகத்தினரை கேட்டுக்கொண்டார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

Tips on How to Win in an Online Casino - Techopedia