எம்மைப் பற்றி

வட மாகாண சபைக்கு உங்களை வரவேற்கின்றோம்

வட மாகாண சபை என்பது இலங்கையின் வட மாகாணத்துக்குரியதாகும். இலங்கையின் அரசியல் யாப்பின் படி,  வடக்கு மாகாண சபையானது பல்வேறு துறைகளில் சட்ட அதிகாரத்தினை கொண்டுள்ளது. உதாரணமாக விவசாயம், கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, உள்ளூராட்சி, திட்டமிடல், வீதி அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள்.

எமது தொலைநோக்கு

Excellent system of Governance, which satisfies the needs and aspirations of the people in the province.

 

எமது பணிக்கூற்று

Mobilization and optimum utilization of resources towards efficient & effective service delivery for improved living standard of the people.

வடமாகண சபை பற்றிய ஒரு வரலாற்றுச் சுருக்கம்

முதன் முறையாக இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 42 ஆவதின் பிரிவின் படி 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. 

1988 இல் முதன் முறையாக சகல எட்டு மாகாணங்களிலும் தேர்தல்கள் நடாத்தப்பட்டன. 05 டிசம்பர் 1988 ஆம் திகதி, தெரிவு செய்யப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டது. மிகக்குறுகிய காலமே தொழிற்பட்ட இந்த மாகாண சபையானது 1990 ஜுன் மாதம் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கென ஒரு தேர்தல் நடாத்தப்படவில்லை. கௌரவ ஆளுநரின் நிருவகிப்பின் கீழ் இதன் ஆட்சி தொடரப்பட்டது. 

20 ஆண்டுகளின் பின் இலங்கை ஜனநாயகக் குடியரசின் உச்சநீதி மன்றத் தீர்ப்பின் படி 16 ஐப்பசி 2006ம் திகதி இணைந்த வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகமானதுவடக்கு மாகாண நிர்வாகம், கிழக்கு மாகாண நிர்வாகம் என இரு வேறு நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டது.

அதி மேதகு ஜனாதிபதி அவர்களால் றியர் அட்மிரல் மோகான் விஜயவிக்கிரம USP, NDC, PSC அவர்கள் பதில் ஆளுநராக 22 டிசம்பர் 2006 தொடக்கம் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டார். வடக்கு மாகாண பிரதம செயலாளார், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் 01 ஜனவரி 2007 ம் திகதி தொடக்கம் செயற்படத் தொடங்கின.

 

வட மாகாண சபைக்குரிய அடையாளங்கள்

கொடி

  • நீல நிறக் கரை கடல்சார் வளங்களைக் குறிக்கும்
  • பச்சை நிறம் மாகாணத்தின் விவசாயத்தையும் பசுமையைக் குறிக்கும்
  • சிவப்பு நிறம் கடின உழைப்பையும் பெருமுயற்சியையும் குறிக்கும்
  • வெள்ளை நிறம் சகோதர மனப்பான்மையைம் சமாதானத்தையும் உடனொத்து வாழ்தலையும் சுட்டிக்காட்டுகின்றது.
  • கதிர்வீசும் சூரியன் ஒருமித்து தொழிற்படுகின்ற சக்தி மற்றும் இயற்கைச் சக்தி வளங்களை குறிக்கும்.

கொடியின் அளவுப் பரிமாணம் – 126 X 72 cm

இலச்சினை

  •  இலச்சினையின் மேற்பகுதியிலுள்ள மகுடவாக்கியம்  சமத்துவத்தை குறிக்கின்றது.
  • பனைமரமானது பாரம்பரிய ஜீவனோபாய வளத்தைக் குறிப்பதுடன் இந்த மரமானது காலங்கலமாக வட மாகாண சமூகத்திற்கு உணவு, புகலிடம் மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகள் போன்றவற்றுக்கான வழிவகைகளை வழங்கியுள்ளது. [மேலும்..]

மலர்

வெண்டாமரை[Nymphaea lotus] வெண்டாமரை என்பது சேற்றில் உதித்து அழகையும் தூய்மையையும் வெளிப்படுத்தி நிற்கின்ற ஒரு மலராகும். இது கல்வியுடனும் செல்வத்துடனும் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. வட மாகாணத்தின் பாரம்பரியத்திற்கேற்ப, இம்மலரானது சமூகத்தினதும் தனிநபர்களினதும் கலாசாரத்தையும் பண்பையும் மெருகூட்டுவதில் பங்கு வகிக்கின்றது.

மரம்

மருதமரம் [Terminalia arjuna]

தொடர்ச்சியான இலைகள் நீண்ட ஆயுள் நேர்த்தியான தோற்றம் உயர்ந்த பார்வை போன்றவற்றைக் குறிக்கின்றது.

பறவை

புலுனி[Turdoides striata] உள்நாட்டுப் பறவை, விவசாயிகளின் தோழன் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் ஒரு பாலமாகக் காணப்படுவதுடன் ஒற்றுமையுடன் வாழுகின்ற ஓர் பறவையாகும்.

விலங்கு

ஆண் மான்[Axis axis]
 
இது வடமாகண சமூகத்தின் இயல்புகளான கபடமின்மை, நட்புடன் பழகுதல், ஊறுவிளைவிக்காமை, அழகுணர்ச்சி என்பவற்றைக் குறிக்கின்றது.