அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் வவுனியாவில் தேசிய தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இடம்பெற்றது.

வவுனியா கந்தசாமி கோயிலில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.விதுர விக்கிரமநாயக்க மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் அரச அனுசரணையுடன் தேசிய தீபாவளிப் பண்டிகை சம்பிரதாயபூர்வமாக நேற்று (12) கொண்டாடப்பட்டது.
சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து தேசிய தீபாவளி பண்டிகையை ஏற்பாடு செய்திருந்தது.
​நிகழ்வில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனுப்பிய தீபாவளி வாழ்த்துச் செய்தியை அமைச்சர் தெரிவித்தார்.
சமய, கலாசார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்நிகழ்வில் தேசிய தீபாவளிப் பண்டிகை வவுனியாவில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அரசாங்கம் தேசிய தீபாவளி பண்டிகையை வடமாகாணத்தில் நடாத்துவதியுள்ளது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும் என வடமாகாண மக்கள் தெரிவித்தனர்.