வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

21 ஜனவரி 2020 அன்று  வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில்  வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார்.

வவுனியா இரட்டைபெரிய குளத்தில் அமைந்துள்ள சிங்கப்பூர் மஹாகருணா கல்லூரியின் கிளை நிறுவனத்தில் ஆளுநருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது

வடக்குமாகாண ஆளுநர் முன்னர் வவுனியாஅரசஅதிபராக பதவி வகித்தகாலத்தில் குறித்த கல்லூரியின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியா மதகுவைத்தகுளத்தில் அவர்களுக்கான காணி ஒன்றை ஒதுக்கி கொடுத்து பிள்ளைகளின் கல்விவளர்சிக்கு நல்லதொரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் என்று இந்நிகழ்வில் உரையாற்றிய  அனைவரும் தமது உரையில் நினைவு கூர்ந்து நன்றி பாராட்டினார்கள்.

இந்தநிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தனக்கு மகத்தான வரவேற்பு அளித்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறினார். அத்தோடு தற்போது கடமையில் இருக்கும் பிரதேசசெயலர் உட்பட பல அரச அதிகாரிகளுடன் ஏற்கனவே பணியாற்றிய பரிச்சயத்தைக்கொண்டு குறித்த பிரதேசமக்களின் பிரசினைகள் தொடர்பில் தான் அறிந்திருப்பதாக கூறினார். இந்தநாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமையவே வடக்கு மாகாணத்தின் ஆளுநராக மக்களுக்கு பணிசெய்ய தான் வந்திருப்பதை நினைவுபடுத்தினார்.

சமயம் மொழி என்ற பிரிவினைகள் இன்றி ஒரே தேசத்தின் கீழ் நாம் ஒற்றுமையாக இருப்பதன் அவசியத்தை இதன்போது வலியுறுத்தினார்.

பல சமயங்களைச் சேர்ந்த பல மொழிகளைப் பேசக்கூடிய அதிகாரிகள் தனது அலுவலகத்தில் பணியாற்றுவதாக தெரிவித்த  ஆளுநர் இலகுவாக உங்கள் பிரச்சனைகளை எனக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அரச மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடைய உதவியோடு இனம்காணப்படுகின்ற  மக்கள் பிரச்சினைகளை விரைவாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து தீர்வு பெற்றுத்தர முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியா பிரதேச செயலர், வவுனியா பிரதேசசபை உபதவிசாளர், பிராந்திய உள்ளுராட்சி உதவிஆணையாளர், வடக்குமாகாண ஆளுநரின் செயலாளர், கல்லூரியின் உயர் அதிகாரிகள், சிங்கப்பூரில் இருந்து வருகைதந்த அதிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான தாய்மாருக்கு குழந்தை பராமரிப்புக்கு தேவையான பொருட்க்களைகொண்ட பரிசுப்பொருட்கள் ஆளுநரால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வை முடித்துக்கொண்டு வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு கௌரவ வடக்குமாகாண ஆளுநர் அவர்கள் விஜயம் செய்திருந்தார் அங்குவைத்து குறித்த பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்து பேசியதோடு அவரை காணவந்திருந்த பொதுமக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

இன்றையதினம் வவுனியா நகரை அண்மித்த பகுதியில் தனியார் விருந்தகம் ஒன்றில் அந்தபகுதி மக்களால் வழங்கப்படட வரவேற்பு உபசாரத்திலும் கௌரவ வடக்குமாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார்.