ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கையான மற்றும் பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளல் அவசியம். அந்த வகையில் வடமாகாண விவசாயத்திணைக்களமானது பாரம்பரிய மற்றும் போசணைமிகு உணவுகளை சுகாதாரமான முறையில் பொதுமக்களிற்கு வழங்கும் நோக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ”அம்மாச்சி ” எனும் உணவகங்ளை ஆரம்பித்து வைத்து சிறப்பான சேவையை மக்களிற்கு ஆற்றிவருகின்றது.
அந்த வகையில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி நகர் பகுதியில் புதிய அம்மாச்சி உணவகம் 02 ஜனவரி 2020 அன்று சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பூ.உகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான திரு.ச.கனகரத்தினம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.கே.தெய்வேந்திரம், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் திரு. வீ.பிரேமகுமார், பிரதி மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர், துணுகாய் பிரதேச சபையின் தவிசாளர், பிரதி மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர், கமநல உதவி ஆணiயாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
நிகழ்வில் முதi;மை விருந்தினர் அவர்களாhல் விவசாயத் திணைக்களத்தின் கீழ் அமைக்கப்பட்ட விவசாயிகள் பயிற்சி நிலையத்தின் பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து அம்மாச்சி உணவகத்தின் பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு அம்மாச்சி உணவகம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பாலிநகர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், விருந்தினர்களின் உரைகள் ஆகியன நடைபெற்றதுடன் அம்மாச்சி உணவகத்தின் வணிக நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அம்மாச்சி உணவகத்தின் கட்டிட நிர்மாண வேலைக்கான நிதியானது நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மூலமாக 3.581 மில்லியன் ரூபாவும் மாகாண குறித்தொகுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து (PSDG) தளபாடங்கள் மற்றும் உபகரணங்களிற்காக 1.7 மில்லியன் ரூபாவும் மற்றும் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை (CBG) நிதியிலிருந்து மேலதிக வேலைக்காக 0.8 மல்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
அம்மாச்சி உணவகமானது பாரம்பரிய மற்றும் போசணை மிகு உணவுவகைகள் விற்பனை செய்வதுடன் சேதன மரக்கறிவகைகள், பெறுமதிசேர் உணவு உற்பத்திகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அம்மாச்சி உணவகங்கள் மக்களின் போசணை மட்டத்தினை உயர்த்துதல், பாரம்பரிய உணவு வகைகளை நுகர்தலை ஊக்குவித்தல், பாடசாலை மாணவர்களினது போசணை மட்டத்தினை அதிகரித்தல், போரினால் பாதிப்படைந்த பெண்கள் மற்றும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.