ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலில் ஹய்ரெக் லங்காவின் தேசிய தொழில் தகமை தொழிற்பயிற்சி கருத்தரங்கு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக வடமாகாணத்திலுள்ள வேலையற்ற இளைஞர்களை தேசிய ஊழியர் படையணியில் இணைத்துக்கொள்வதற்கும், தொழிற்தகுதி மற்றும் தொழில்விருத்தி செயற்திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்தகுதிச்சான்றிதழ்களை வழங்குவதற்கான குறுங்காலத் தொழிற்பயிற்சி தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இம்மாதம் நடைபெறவுள்ளது.

ஆளுநர் செயலகம் , மாவட்டச் செயலகம் மற்றும் ஹய்ரெக் லங்கா நிறுவனம் ஆகியன இணைந்து வடமாகாணத்தை சேர்ந்த 5 மாவட்ட செயலகங்களிலும் நடாத்தவுள்ள இந்த கருத்தரங்கில் மின் இணைப்பாளர் , கனரகவாகன இயக்குனர், கட்டுமானப்பணியாளர், வாகனம்திருத்துநர், வளி சீராக்கி திருத்துநர், தளமேற்பார்வையாளர், ஆட்டோ மொபைல், ஆட்டோ எலக்ட்ரிக்கல் தொழில்நுட்பவியலாளர் போன்ற பயிற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

இது தொடர்பான பதிவுகளை பிரதேச செயலகங்களில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவுகளை மேற்கொள்ள தவறியவர்களும் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் இடம்பெறுகின்ற செயலமர்வுகளில் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கருத்தரங்குகள் நடைபெறும் இடங்களாவன

மாவட்டம் இடம் திகதி நேரம்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் 14/10/2019

திங்கட்கிழமை

9.30am- 12.30pm
கிளிநொச்சி மாவட்ட செயலகம் 14/10/2019

திங்கட்கிழமை

2.00pm – 4.00pm
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் 15/10/2019

செவ்வாய்க்கிழமை

9.30am – 12.30pm
வவுனியா மாவட்ட செயலகம் 16/10/2019

புதன்கிழமை

9.30am – 12.30pm
மன்னார் மாவட்ட செயலகம் 17/10/2019

வியாழக்கிழமை

9.30am – 12.30pm