ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் வடமாகாண வலய கல்விப்பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 24 செப்ரெம்பர் 2019 அன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது காணொளி தொடர்பாடல் மூலம் ஆளுநர் அவர்கள் உரையாடுகையில், வடமாகாண பாடசாலைகளில் பாடசாலை அனுமதியின் போது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படின் அதுதொடர்பிலான அனுமதி முன்னரே வடமாகாண கல்வி அமைச்சிடம் பெற்றுக்கொள்ளப்படவேண்டும். அத்துடன் வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பாடசாலைகள் சுற்றறிக்கைகளுக்கமைவாக செயற்படவேண்டும் என்பதுடன் வடமாகாண பாடசாலைகளில் மாணவர் அனுமதியின்போது நன்கொடைகள் வழங்குமாறு கேட்கப்படின் அவை தொடர்பான தகவல்களை ஆளுநர் செயலகத்திற்கு அறியத்தருமாறும், ஆளுநர் செயலகத்தினூடாக குறித்த தகவல்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என்றும் கௌவர ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பில் மாகாண கல்விப்பணிப்பாளர் , வலய கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் கூடிய அக்கறையுடன் செயற்படவேண்டும் என்றும் ஆளுநர் அவர்கள் இதன்போது கேட்டுக்கொண்டார்.
வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு