சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்து கௌரவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிறந்த விவசாயிகள் கௌரவிப்பில் 2018 ஆம் ஆண்டிற்கான நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்
ஜனாப் க.மு.அ.சுக்கூர் அவர்களின் தலைமையில் 11.05.2019 ஆம் திகதி சனிக் கிழமை உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு. சி.சிவகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், வெற்றி பெற்ற விவசாயிகள் மற்றும் மன்னார், நானாட்டான், மாந்தை, மடு, முசலி பிரதேச விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

பிரதம விருந்தனர் அவர்கள் வெற்றிபெற்ற வெற்றியாளர்கள் அனைவரையும் பாராட்டினார். தொடர்ந்து தனது உரையில் விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களிலிருந்து கிடைக்கப்பெறும் பலாபலன்களின் அடிப்படையில் மேலதிக திட்டங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அத் திட்டங்களினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இக் கௌரவிப்பு நிகழ்வில் மத்திய விவசாய அமைச்சினால் ‘நாம் வளர்த்து நாம் உண்போம்” எனும் விரைவுபடுத்தும் விவசாய அபிவிருத்தித் திட்டம் – 2018 இன் கீழ் நடாத்தப்பட்ட சிறந்த விவசாயிகள் தெரிவிற்கான மாகாண மட்டப் போட்டியில் மன்னார் மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்ற மூன்று வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இப் போட்டியில் சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றி பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர் வகுதியின் கீழ் பெரியமடு மேற்கைச் சேர்ந்த ஜனாப். க.மு.ஜமால்டீன் என்பவர் வட மாகாணத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டார். இவருக்கு சான்றிதழும் பணப்பரிசாக ரூபா 7,500.00 /= பெறுமதி கொண்ட காசோலையம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இதே வகுதியின் கீழ் மடுவைச் சேர்ந்த திரு. சோமசுந்தரம் கனகசுந்தரம் என்பவர் வட மாகாணத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றுக் கொண்டார். இவருக்கு சான்றிதழும் பணப்பரிசாக ரூபா 5,000.00 /= பெறுமதி கொண்ட காசோலையம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர் வகுதியின் கீழ் உயிலங்குளத்தைச் சேர்ந்த திரு. சிங்காரவேல் செல்வராசா என்பவர் வட மாகாணத்தில் இரண்டாமிடத்தினைப் பெற்றுக் கொண்டார். இவருக்கு சான்றிதழும் பணப்பரிசாக ரூபா 7,500.00 /= பெறுமதி கொண்ட காசோலையம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள் மற்றும் சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர்களும் மாகாண விவசாயத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்ட சிறந்த தேனீவளர்ப்பாளர்கள் மற்றும் பழப்பயிர்ச் செய்கையில் சிறந்த விவசாயச் செயன்முறைகளைப் பின்பற்றுபவர்கள் என 04 தலைப்புக்களின் கீழ் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட 12 வெற்றியாளர்களிற்கும் வெற்றிக்கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசு என்பன வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். பணப்பரிசாக முதல் மூன்று வெற்றியாளர்களிற்கும் முறையே ரூபா 15,000.00 /=, ரூபா 12,500.00/=, ரூபா 10,000.00 /= எனும் அடிப்படையில் காசோலைகள் வழங்கப்பட்டன.

ஒவ்வோர் தலைப்புக்களின்; கீழும் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட வெற்றியாளர்களின் விபரங்கள் கீழ் வருமாறு

 

  1. சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர்
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் ஜனாப். முகமது அப்துல் காதர் ஜவ்பர் புதிய கொலணி மேற்கு,
பெரிய மடு
02 2ம் இடம் இலட்சுமணன் சக்திவேல் பெரிய நீலாசேனை, உயிலங்குளம்
03 3ம் இடம் ஜனாப். மீரா முகைதீன் முகம்மது சித்திக் மினுக்கன், அடம்பன்
  1. சிறந்த சேதனச் செய்கையாளர்
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் ஜனாப். சேகு முகைதீன் இஸ்ஸதீன் மினுக்கன், அடம்பன்
02 2ம் இடம் சீமான் றெஜிஸ்குமார் 8 ம் வட்டாரம், மாட்டின் வீதி, போசாலை
03 3ம் இடம் திருமதி சந்திரசேகரம் பத்மபிரியா தட்சணாமருதமடு, பாலம்பிட்டி
  1. சிறந்த தேனீ வளர்ப்பாளர்
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் செல்லத்துரை விக்னேஸ்வரன் எருவிட்டான், நானாட்டான்
02 2ம் இடம் வாரித்தம்பி நவரெத்தினம் தட்சணாமருதமடு, பாலம்பிட்டி
03 3ம் இடம் திருமதி அண்ணாமலை ஜெயராஜேஸ்வரி தட்சணாமருதமடு, பாலம்பிட்டி
  1. பழப்பயிர்ச் செய்கையில் சிறந்த விவசாயச் செயன்முறைகளைப் பின்பற்றுபவர்
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் பொன்னையா மகேந்திரன் கீரிசுட்டான், பாலம்பிட்டி
02 2ம் இடம் ஜனாபா முஹமட் காசிம் நசீமா பெரியமடு, விடத்தல் தீவு, மாந்தை மேற்கு, மன்னார்
03 3ம் இடம் திருமதி. கனிசியஸ் அருட்திலகன் மேரி அன்றோ சுபாஜினி சூரிய கட்டைக்காடு, நானாட்டான்