2026/2027 மகா போகத்திற்கான சூப்பர் யாயா 10+ திட்டத்தின் கீழ், ஆரம்ப விழா நவம்பர் 4 ஆம் தேதி மன்னார் மாவட்டம், உயிர்த்தரசங்குளம் யாயாவில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தின் மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர், ஏ. பார்ஸ் ரூ கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் சிரேஸ்ட பொது முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், மன்னார் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்ச்சியின் போது, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தின் (PSDG) கீழ், விவசாயத் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட பிஜி 360 விதை நெல் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விநியோகிக்கப்பட்டது. அதே சமயம், ஏ. பார்ஸ் ரூ கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் உரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இதன்போது விவசாயிகளுடனான கலந்துரையாடல் ஒன்றும் பயனுள்ள வகையில் இடம்பெற்றது. விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சுப்பர் யாயா நெற்செய்கைக்கான பரிந்துரைக்கப்பட்ட பயிர்ச்செய்கை முறைகள் தொடர்பான விளக்கங்களை வழங்கினர். அதேவேளை, நிறுவனத்தின் பிரதிநிதிகள் தமது உர வகைகள், அவற்றின் நன்மைகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்த வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட முறைகள் தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கினர்.
கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக நடைமுறை வயல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன் கீழ் மண் பரிசோதனைக்கான மண் மாதிரிகள் சேகரித்தல், நிலத்தைப் பண்படுத்துதல், மண்ணின் வளத்தை மேம்படுத்தி பயிர்ச்செய்கைக்குத் தயார்ப்படுத்தும் நோக்கில் கூட்டெரு மற்றும் பகுதி எரிக்கப்பட்ட நெல் உமி ஆகியவற்றை வயலில் இடுதல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வானது விவசாயிகளுக்குத் தேவையான நடைமுறை மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்ததுடன் 2026ஃ2027 அதிக நெல் விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் விவசாயத் திணைக்களம், தனியார் துறை மற்றும் விவசாயிகளுக்கிடையிலான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தியது.











