மன்னார் மாவட்டம், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எருக்கலம்பிட்டி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் தாராபுரம், துருக்கிநகர் பகுதியில் மிளகாய்ச் செய்கையில் இலைச்சுருளல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வு 23.09.2026 அன்று காலை 9.00 மணியளவில் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி S.ஸ்ரெலா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன், உதவி விவசாயப் பணிப்பாளர் திரு.மேர்வின் றொசான் றோச், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வானது இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விவசாயப் போதனாசிரியரினால் வரவேற்பு உரை இடம்பெற்றது மேலும் இந்நிகழ்வின் நோக்கம், மிளகாய்ச் செய்கை தொடர்பான தொழிநுட்பங்கள் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன் அவர்கள் உரையாற்றுகையில், ஆஐஊர் ர்ல 1 இன் மிளகாய்ச் செய்கையின் முக்கியத்துவம், இலைச்சுருளல் நோய்க் கட்டுப்பாட்டு தொழிநுட்பங்கள் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டது. அத்துடன் தூவல் நீர்ப்பாசனத்தின் முக்கியத்துவம், மஞ்சள் ஒட்டுப்பலகை மூலமாக பூச்சித் தாக்கங்களைக் குறைத்தல் போன்ற தொழிநுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து உதவி விவசாயப் பணிப்பாளர் திரு.மேர்வின் றொசான் றோச் உரையாற்றுகையில் மிளகாய் இலைச்சுருளல் நோயின் கட்டுப்பாட்டு தொழிநுட்பத்தினால் விவசாயிகள் பெறக்கூடிய நன்மைகள் மற்றும் விளைச்சலை எவ்வாறு அதிகரித்தல் என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார்.
பின்னர் மிளகாய்ச்செய்கை பார்வையிடப்பட்டு பிரதி விவசாயப் பணிப்பாளர் அவர்களினால் முதலாவது அறுவடையானது ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாடவிதான உத்தியோகத்தர் திரு. யு.து.பு. மார்க் அவர்கள் உரையாற்றுகையில், மிளகாய்ச் செய்கையாளர்கள் எதிர் கொள்ளும் சவால்களில் இலைசுருளல் நோயின் தாக்கம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அதனை ஒருங்கிணைந்த பீடை கட்டுபாட்டு முறையால் மட்டும் கட்டுப்படுத்தல் சிறந்த முறையாக உள்ளது. இவை அனைத்தும் இந்த விவசாயிகள் வயலில் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து அதை விளங்கப்படுத்தினார்.
1.கண்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒரேகாலத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதன் மூலம் பீடை தாக்கத்தை கட்டுத்தல்.
2. எல்லைப் பயிராக சணல் / சோளம் போடுவதன்மூலம் பீடை பரம்பலை கட்டுப்படுத்தல்
3.செவ்வந்தி போன்ற பொறி பயிர்களை தோட்டத்தில் நடுவதால் பீடை பரம்பலை கட்டுப்படுத்தல்
4.ஓட்டும் மஞ்சல் அட்டைகளை (Yellow Sticky Board) பாவிப்பதன் மூலம் பூச்சிகளை அழித்தல்
5.தூவல் நீர்பாசன தொகுதி, மூடுபடை ஆகியவற்றை பாவித்து ஈரலிப்பான சூழலை தொடர்ந்து பேணுவதன் மூலம் பீடை பெருக்கத்தை கட்டுபடுத்துவது தொடர்பாகவும்
6.அத்துடன் தேவை ஏற்படும் போது விவசாயப்போதனாசிரியரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய இரசாயனங்கள் பயன்படுத்துவது போன்ற பல்வேறு கட்டுப்பாட்டு முறைகள் விளங்கப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பாடவிதான உத்தியோகத்தர் மு.மதனராஜ் குலாஸ் அவர்களினால் மஞ்சள் நிற ஒட்டுப்பலகையில் பூச்சிகள் மஞ்சள் நிறத்தினை கவருவதற்கான உயிரியல் தத்துவம் பற்றிய அறிவியல் முக்கியத்துவம் மற்றும் சூழல் பாதிப்பற்ற வகையில் தொழிநுட்பத்தை பயன்படுத்தல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விவசாயி முகமது ஜலால் என்பவரினால் மிளகாயச்செய்கை பற்றிய அனுபவப் பகிரவு வழங்ப்பட்டதுடன் வெற்றிகரமான மிளகாய்ச் செய்கைக்கான ஆலோசனைகளும் பிறவிவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் அவர் கடந்த காலத்தில் இலைச்சுருளல் நோயின்கட்டுப்பாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்தாமை மற்றும் தற்பொழுது தொழிநுட்பத்தினை வினைத்திறனாகப் பயன்படுத்தி நோயைக் கட்டுப்படுத்தியது தொடர்பாகவும் கூறினார்.
தொடர்ந்து, விவசாயப் போதனாசிரியரினால் நன்றியுரை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, வயல்விழா நிகழ்வு நிறைவுபெற்றது.





