மரக்கறிப் பயிர்ச்செய்கை வயல்விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் கிருஸ்ணபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் டித்வா புயலின் அழிவின் பின்னரான மரக்கறிப் பயிர்ச்செய்கை எனும் வயல் விழாவானது விவசாயப் போதனாசிரியர் செல்வி.செ.செல்வநொயிலின் தலைமையில் சி.சண்முகநாதன் என்பவரின் களத்தில் 09.06.2026 காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.சோ.விஜயதாசன், பாடவிதான உத்தியோகத்தர் பழப்பயிர் இ.மாலினி, விவசாயப் போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், கமக்காரஅமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் டித்வா அழிவின் பின்னர் வழங்கப்பட்ட கத்தரி(நீள ஊதா), கீரை(கண்ணொருவ) விதைகள் என்பன பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு சிறந்த அறுவடை அன்றைய தினம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் தேனீ வளர்ப்பு முறையும் செய்முறை விளக்கமும் பாடவிதான உத்தியோகத்தர் (பழப்பயிர்) அவர்களால் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் விவசாயின் கருத்துப்பகிர்வுடன் வயல் விழாவானது இனிதே நிறைவு பெற்றது.