கலப்பு பயிர்ச்செய்கை வயல்விழா – கல்மடுநகர், கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் கல்மடுநகர் பிரதேசத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.கி.சரண்யா அவர்களின் ஒழுங்கமைப்பில் சி.தங்கராசா என்பவரின் வயல் துண்டத்தில் திருமதி.இ.மாலினி (பா.உ- பழப்பயிர்) தலைமையில் டித்வா அழிவின் பின்னராக மரக்கறிச்செய்கையின் கலப்பு பயிர்ச்செய்கையின் வயல்விழா 08.05.2026 அன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி. சோ.விஜயதாசன் அவர்களும், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள்,, கமக்கார அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் மரக்கறி பயிர்களான வெண்டி, பயிற்றை, பாகல், புடோல், கத்தரி,முள்ளங்கி பூசணி, மிளகாய், தக்காளி, கச்சான், மஞ்சள் என்பன பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட சில பயிர்களிற்கான பயிர்செய்கை தொடர்பான விளக்கங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. களத்தரிசிப்புடன் நிறைவுபெற்றது.