வடக்கு மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதார சேவை நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்திய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கும் வட மாகாண சபைக்கும் இடையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) 09.04.2026 அன்று கொழும்பு Galle Face Hotel இல் கைச்சாத்திடப்பட்டது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான இத் திட்டத்தின் கீழ்(Primary Healthcare System Enhancing Project – PHSEP) முதற்கட்டமாக 2026 இல் 500 மில்லியன் செலவிடப்படவுள்ளதுடன் எதிர்வரும் மூன்று வருடங்களில் மொத்த தொகையாக 2000 மில்லியன் செலவிடப்படவுள்ளது.
வட மாகாணத்தில் உள்ள ஆரம்ப சுகாதார சேவை நிலையங்களின் வசதிகளை நவீனப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்துதல் என்பன தொடர்பில் இவ் ஒப்பந்தமானது வட மாகாண மக்களின் சுகாதாரத் தரத்தை உயர்த்துவதற்கான ஒரு முக்கிய மைல்கல் என்பதுடன் இந்த புதிய முன்னெடுப்பின் மூலம் வட மாகாணத்தில் உள்ள கிராமிய மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் பெரும் நன்மையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




