புதிய நெல் இனத்தை அறிமுகப்படுத்துதல் – முன்மாதிரி நெற்செய்கை

பிரதி மாகாணவிவசாயப் பணிப்பாளர் அலுவலகம் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரதிபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் புதுஐயன்குளம், மலையாளபுரம் எனும் இடத்தில் திரு. மாரிமுத்து சாமுவேல் என்பவரது வயல் துண்டத்தில் புதிய நெல்இனத்தை அறிமுகப்படுத்தும் முன்மாதிரி துண்டத்தின் வயல்விழா விவசாயப் போதனாசிரியர் திருமதி அ.அனோஜா தலைமையில் 19.01.2026 அன்று பி.ப 01:30 மணியளவில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதி விவசாயப்பணிப்பாளர் கிளிநொச்சி திருமதி. சோ. விஜயதாசன் அவர்களும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்;போதனாசிரியர்கள், மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். AT18-1322, AT13-1532 வர்க்கங்களை முன்மாதிரித்துண்டங்களாக மேற்கொண்டு சிறப்பான விளைச்சலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறித்த பிரதேசத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பிக்கப்ட்டுள்ளது.

மேலும் கலந்து கொண்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் எதிர்காலத்திலும் இது போன்ற வேறுபட்ட புதிய நெல் வர்க்கங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிறந்த விளைச்சலைப் பெற முடியும் எனக் கூறினார். அத்துடன் சுய விதை நெல் உற்பத்தி பற்றியும் கலந்துரையாடப்பட்டது. குறித்த வயல்விழாவானது சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.