வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து கௌரவ ஆளுநர் அவர்கள் இன்று புதன்கிழமை காலை (22.10.2025) வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.