கைதடி அரச முதியோர் இல்லத்தின் முதியோர் தின வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் 07 ஒக்டோபர் 2025 அன்று மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திரு.மு.நந்தகோபாலன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. திருமதி.தனுஜா லுக்சாந்தன் மாகாணப்பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம் அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்தி அதிதிகளை வரவேற்றார்.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி.மு.தனுஜா, பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக திரு.ச.சிவஸ்ரீ, விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணம், திரு.பி.ச.சத்தியசோதி, செயலாளர், பிரதேச செயலகம், சாவகச்சேரி, திருமதி.க.துசியா, மாகாணப்பணிப்பாளர், தொழிற்துறை திணைக்களம், வடக்கு மாகாணம், வைத்தியர்.திருமதி.அ.வினோதா, ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள். கௌரவ அதிதியாக கைதடி அரச முதியோர் இல்ல ஓய்வு நிலை அத்தியட்சகர் திரு.த.கிருபாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். செல்வி.செ.அகல்யா, மாகாண ஆணையாளர், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
வரவேற்பு நடனம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறுதிநாள் நிகழ்வுகளில் வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள், முதியோரகள், சனசமூக நிலையங்கள், முதியோர் சங்கங்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கினர்.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வட மாகாணப் பிரதம செயலாளர் அவர்கள் ‘முதியோரின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, எதிர் காலத்தில் முதியோர்கள் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம் பற்றி தனது கருத்தை வலியுறுத்தியதுடன் முதியோர் இல்லத்திற்கு அருகாமையில் தனது அலுவலகம் அமைந்திருப்பதனால் முதியோர் நலன் தொடர்பாக என்னை எப்போதும் அணுக முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இதில் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.