முதியோர் தின வாரத்தின் 02ம் நாள் நிகழ்வுகள் திரு. நா.இராஜமனோகரன், அத்தியட்சகர், அரச முதியோர் இல்லம், கைதடி அவர்களின் தலைமையில் 02.10.2025 அன்று பி.ப 2.30 மணியளவில் இடம்பெற்றது. திருமதி. தனுஜா லுக்சாந்தன், மாகாணப் பணிப்பாளர், மாகாண சமூக சேவைகள் திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இவ்நிகழ்வின் பிரதம அதிதியாக திரு.செ.பிரணவநாதன் (பிரதிப் பிரதம செயளாளர் – ஆளணியும் பயிற்சியும்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு அதிதிகளாக செல்வி.எம்.சிவகுமாரி (பிரதம உள்ளக கணக்காளர் வ.மா) மற்றும் வைத்தியர் திருமதி.நி.பானுரேகா (ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு-கைதடி) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். கௌரவ அதிதியாக திரு.ஸ்ரீ.ஸ்ரீவிமலகாந்தன் (கணக்காளர் (பதில்) – சமூக சேவைகள் திணைக்களம் வ.மா), அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு இல்ல வாழ் முதியவர்களினால் பூங்கொத்து வழங்கி வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அதிதிகள், இல்ல வாழ் முதியவர்கள் மற்றும் அலுவலர்களினால் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டதனை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை சங்கானை முதியோர் சங்கத்தினர் வழங்கினர்
வரவேற்பு உரையினை தொடர்ந்து திரு. நா.இராஜமனோகரன், அத்தியட்சகர், அரச முதியோர் இல்லம், கைதடி அவர்கள் தலைமை உரையினை நிகழ்த்தியிருந்தார். அதில் அரச முதியோர் இல்லத்தில் நிலவுகின்ற ஆளணி பற்றாக்குறை தொடர்பான பிரச்சனையை மையப்படுத்தி அவ் உரையை ஆற்றிருந்தார். அதனைத்தொடர்ந்து அதிதிகள் உரைகள் இடம்பெற்றன.
மேலும் நிகழ்வு சிறப்புறும் வகையில் பிரதேச மட்ட முதியோர் சங்கம் வலி-வடக்கு அங்கத்தவர்களின் பாடல், நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.