வடக்கு மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சுக்கள், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு 02.10.2025 அன்று பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகங்கள் இணைந்து நடாத்திய வாணி விழாவின் இறுதி நாள் நிகழ்வில் அமைச்சு செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் விழாவில் யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களின் வில்லுப்பாட்டு, பிரதிப் பிரதம செயலாளர் நிதி அலுவலக கணக்காளரின் பக்தி பாடல்கள், மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தரின் புதல்விகளின் நடனம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.