வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்திற்காக அமைக்கப்படவுள்ள சமூகத்தொடர்பு மைய (Community Interaction Hub) கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா 24.09.2025 அன்று நடைபெற்றது.
இந்த சமூகத்தெடர்பு மையம் ஆனது 37.57 மில்லியன் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை ஊடாக மாகாண சமூக சேவைகள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண பிரதம செயாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்கள் குறித்த கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தெடர்ந்து வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திரு.மு.நந்தகோபாலன் அவர்களும் சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் திருமதி.தனுஜா லுக்ஷாந்தன் அவர்களும் கைதடி அரச முதியோர் இல்லத்தின் அத்தியட்சகர் திரு.நா.இராஜமனோகரன் அவர்களும் வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.த.நிகேதன், இல்ல முதியவர்கள் மற்றும் இல்ல பணியாளர்கள் ஆகியோர் கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
இந்த சமூகத் தொடர்பு மையமானது முதியோர் இல்லத்தில் வதியும் முதியவர்களை வெளி சமூகத்துடன் இணைத்து சமூக ஊடாட்டத்திற்கும் தொடர்புக்குமான மையமாக எதிர்காலத்தில் விளங்கும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் அரச முதியோர் இல்ல முதியவர்கள், இல்ல பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.