புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட (திறந்த) இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டம்

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தால் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தின் தொடர்ச்சியாக மாகாண சபைகளில் பயிற்சி பெறுவதற்கான அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 22.09.2025 அன்று நடைபெற்றது.

செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெறவுள்ள இப் பயிற்சி திட்டத்தில் வடக்கு மாகாண சபையில் உள்ள பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பிலான அனுபவத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சித் திட்டமானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண பேரவைச் செயலக செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்-நிர்வாகம்,பிரதிப் பிரதம செயலாளர்-ஆளணி மற்றும் பயிற்சி,உதவிப் பிரதம செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.