பாத்தீனியம் களையானது பொறிமுறை, இரசாயன முறை மற்றும் சட்டமுறை மூலம் யாழ் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் பாத்தீனியக் களையை உயிரியல் முறை மூலம்; கட்டுப்படுத்துவதற்கு 26.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நீர்வேலி வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில், திரு.இராதாகிருஸ்ணன் ஐங்கரன், தொழில்நுட்ப உதவியாளர், நீர்வேலி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன், பிரதி விவசாயப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், திருமதி. டில்ருக்சி, பிரதிப் பணிப்பாளர், தேசிய பயிர் பாதுகாப்புப் சேவை, உதவி விவசாயப் பணிப்பாளர்கள், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாயத்; திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
பாத்தீனியத்தின் உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் பாத்தீனிய வண்டு எனப் பொதுவாக அழைக்கப்படும். Zygogramma Bicolorata வண்டானது பயன்படுத்தப்படுகின்றது. மத்திய விவசாயத் திணைக்களத்தின் தேசிய தாவரப் பாதுகாப்புப் பிரிவினரால் கண்டியிலிருந்து எடுத்துவரப்பட்டது. இப் பாத்தீனிய வண்டின் வாழ்க்கை வட்டத்தில் முட்டை, குடம்பி, கூட்டுப்புழு, நிறையுடலி என நான்கு படிநிலைகள் காணப்படுகின்றது. வாழ்க்கை வட்டம் 90 – 100 நாட்களில் முடிவடையும். இவ்வாழ்க்கை வட்டத்தில் குடம்பி மற்றும் நிறையுடலி படிநிலைகள் பாத்தீனிய இலைகளை உட்கொள்வதன் மூலம் இக்களையை அழிவடையச் செய்யும். இவ்வண்டு பாத்தீனியத்தினை மட்டுமே உட்கொள்ளும் தனித்துவமானது.
இவ் உயிரியல் கட்டுப்பாட்டுக்குரிய ஆராய்ச்சியானது விவசாய ஆராய்ச்சி நிலையங்களில் நடைபெற்று யாழ் மாவட்டத்தில் நீர்வேலிப் பகுதியில் மனித நடமாட்டம் குறைந்த மற்றும் இரசாயப் பாவனை குறைந்த சாதாரணமான விவசாய நிலங்களில் பரீட்சார்த்தமாக விடுவிக்கப்பட்டது. இது தொடர்பான செயற்பாடுகள் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு பாத்தீனியத்தை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.