நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத் தூதரகத்துடன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு இணைந்து நடாத்திய தெய்வீக சுகானுபவம் பதினோராவது (11) நிகழ்வானது 2025.08.20 புதன்கிழமை யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நல்லூர்க் கோட்டக்கல்வி அலுவலக முன்றலில் (முன்னாள் யா/கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில்) வடக்கு மாகாண கல்விஇ பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் முன்னோடி நிகழ்வாக காலை 9.00 மணி தொடக்கம் 12மணி வரை இந்தியாவின் புகழ்பூத்த பரதநாட்டியக் கலைஞர் திருமதி கிரண்மயீ மதுபு குழுவினரின் பரத நாட்டிய பயிற்சிப்பட்டறை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நடன ஆசிரியர்கள்இ நடனத்துறை சார்ந்த மாணவர்கள்இ கலைஞர்கள் என 250ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிய தெய்வீக சுகானுபவ நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.இந்திய துணைத் தூதுவர் கௌரவ எஸ்.சாய்முரளி அவர்கள் கலந்து கொண்டார். இந்திய துணைத் தூதரக அலுவலகத்தின் உயர் அதிகாரிகளும் மற்றும் அலுவலர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்(ஆளணியும் பயிற்சியும்)இ வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர், கணக்காளர், உதவிச்செயலாளர், பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் மற்றும் சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு மேடைக்கு அழைத்து வரப்பட்டதுடன் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. நல்லூர் சாரங்கம் இசைமன்றத்தினரின் தமிழ்த்தாய் வாழ்த்துஇ பொன்னாலை சந்திரபரத கலாலயம் கலைமன்றத்தினரின் வரவேற்பு நடனம்இ நல்லூர் சாஹித்திய வீணாலயா குழுவினரின் விரலிசைநாதசங்கமம் ஆகிய நிகழ்வுகள் உள்ளுர் கலைஞர்களால் இந்நிகழ்வுகளினை சிறப்பிக்கும் முகமாக வழங்கிய கலை ஆற்றுகைகளாக இருந்தது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையுரைஇ யாழ்-இந்திய துணைத்தூதுவர் அவர்களின் பிரதம விருந்தினர் உரை என்பன இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் புகழ்பூத்த பரதநாட்டிய கலைஞர் கிரண்மயீ மதுபு குழுவினரின் பரதநாட்டிய நிகழ்வும்இ இந்தியாவின் கர்நாடக இசைக்கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவன் குழுவினரின் கர்நாடக இசைக் கச்சேரியும் நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் கலைஞர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்வின் நிறைவாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. லா.நிருபராஷ் அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டதுடன் நிகழ்வு இரவு 10.30 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.