யாழ் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் – 2025 (PSDG) கீழ் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடு வழங்கும் நிகழ்வு 30.07.2025 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய விரிவுரை மண்டபத்தில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.சண்முகராஜா சிவஸ்ரீ, செயலாளர், விவசாய அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் – மாகாண விவசாயப் பணிப்பாளர்(வடக்கு மாகாணம்), கலாநிதி .துஅரசகேசரி -சிரேஸ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம், திருமதி. பவளேஸ்வரன் பாலகௌரி பிரதி பணிப்பாளர்(ஆராய்ச்சி), திரு.சு.சஞ்சீவன் பிரதி விவசாயப் பணிப்பாளர், விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையம், பரந்தன் அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் விதை மற்றும் ஆராய்ச்சி பிரிவு உத்தியோகத்தர்கள், பண்ணை ஒலிபரப்புச் சேவை உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் கொத்தணிக்; கிராமத்தின் செத்தல் மிளகாய் உற்பத்தித்திட்டத்தின் கீழ் 250 பயனாளிகளில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளிக்கும் 100 மிளகாய்ப் பொதிப் பைகளும், 10 ஆஐஊர் ர்லடிசனை 1 மிளகாய் நாற்றுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் மஞ்சள் செய்கையை ஊக்குவிக்கும் விதமாக 45 பயனாளிகளுக்கு 500 சதுர மீற்றர் பரப்பளவில் பயிரிடுவதற்கு ஒவ்வொரு பயனாளிக்கும் விதை கிழங்;கு 25 மப வும், மறுவயற் பயி;ர் செய்கையில் உற்பத்தித் திறனை ஊக்குவித்தல், வயல் நிலத்தில் பயிர் பல்வகைமையை ஊக்குவித்தல் மற்றும் விவசாய இயந்திர மயமாக்கல் தொழில்நுட்ப அலகுகளை ஊக்குவிக்கும் விதமாக 31 பயனாளிகளுக்கும், ஊடு களை கட்டும் இயந்திரம் (Heavy duty inter cultivator) வழங்கி வைக்கப்பட்டன. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அறுவடைக்குப் பிந்திய இழப்பைக் குறைப்பதற்காக பிளாஸ்ரிக் கூடை (Plastic Crates) மற்றும் பயிர்ச்செய்கையில் குரங்குகளைக் கட்டுப்படுத்துவதற்காக 41 வாயுத் துப்பாக்கி என்பன வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வெங்காயக் கொட்டகை அமைத்த 3 பயனாளிகளுக்கும் மற்றும் விவசாயக் கிணறு புனரமைத்த 7 பயனாளிகளுக்கும் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் களை கட்டும் இயந்திரத்தினை பயன்படுத்தலும் பராமரித்தலும் தொடர்பான செயல்முறையுடன் கூடிய பயிற்சி நெறியும் வழங்கப்பட்டது.