மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

யாழ் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் – 2025 (PSDG) கீழ் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வீட்டுத்தோட்ட பொதி வழங்கல் நிகழ்வு 26.06.2025 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய விரிவுரை மண்டபத்தில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டத்தில் 3.5 மில்லியன் ஒதுக்கீட்டில் மாவட்ட ரீதியாக 403 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர் ஒரு பயனாளிக்கு வெண்டி, கீரை, பயிற்றை, பாகல், புடோல் விதைகளும் மிளகாய், கத்தரி, தக்காளி நாற்றுக்களும் பப்பாசி, கறுவா, மிளகு, வெற்றிலை, கோப்பி கன்றுகளும் பூவாளி, முள்ளு மண்வெட்டி போன்ற உபகரணங்களும் நாற்றுக்கள் நாட்டுவதற்கான பொதிப்பைகள், தேனீப்பெட்டி மற்றும் மண்புழு உரம் என்பன நிகழ்வில் வழங்கப்பட்டன.

மேலும் பிரதி விவசாயப் பணிப்பாளர் அவர்கள் வீட்டுத்தோட்டத்தின் முக்கியத்துவமும் அதன் பயன்கள் தொடர்பாக கருத்துரை வழங்கினார் அத்துடன் வீட்டுத்தோட்டத் திட்டமிடல் அதன் முக்கியத்துவம், வீட்டுத்தோட்டத்தில் பயிரிடக்கூடிய பயிர்கள் சேதன முறை பீடைக்கட்டுப்பாடு, கூட்டெரு தயாரிப்பு, தாவரப்பீடை நாசினி தயாரிப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு பாடவிதான உத்தியோகத்தரால் நடாத்தப்பட்டது. அத்துடன் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள நகர்ப்புறத்தோட்டம், சேதன உற்பத்தி மற்றும் தாவர பீடை நாசினி தயாரிப்பு இடம் என்பன நேரடியாக காண்பிக்கப்பட்டு செயன்முறை ரீதியான பயிற்சியும் வழங்கப்பட்டது.