யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவக்குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவக்குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் 28.05.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது.

23.08.2023 திகதி இணைந்த முகாமைத்துவக் கூட்டம் இறுதியாக நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தை கூட்டுவதற்கான கோரிக்கையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முன்வைத்திருந்தார்.

அதற்கு அமைவாக நேற்றுப் புதன்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியத் தூதுவர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள், யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ;ணேந்திரன், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.டிலானி, கலாசார ஊக்குவிப்பு பணிப்பாளர் பிரசாட் ரணசிங்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், புத்தசாசன, சமய விவகார கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹிந்தும சுனில் செனவி இணையவழியில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.