முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவில், சந்திரன் நகர் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு .

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவில், சந்திரன் நகர் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (28.05.2025) இடம்பெற்றது.

இந்திய அரசாங்கத்தின் 5 லட்சம் ரூபா நிதியுதவியும், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஒரு லட்சம் ரூபா பங்களிப்புடனும் 24 வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஆகியோர் இணைந்து மக்களிடம் கையளித்தனர்.