வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் 12.03.2025 அன்று புதன் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விருந்தினர்கள் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டதுடன், கலாசார நிகழ்வுகளும் அரங்கில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர், வடக்கு மாகாண கலாசார திணைக்களப் பணிப்பாளர், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.