சமூகப் பராமரிப்பு நிலையம் மருதங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது

சமூக சேவைகள் திணைக்களத்தினால் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் PSDG வேலைத் திட்டத்தின் கீழ் ரூபா. 13.374 மில்லியன் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட சமூகப் பராமரிப்பு நிலையமானது 2025.02.28ஆம் திகதி காலை 09.00 மணிக்கு கௌரவ ஆளுநர் திரு நா. வேதநாயகம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் திரு நா. வேதநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு பொ. வாகீசன், செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வடமாகாணம், திரு ந. சுதாகரன், பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்), வடமாகணம், திரு க. சிறிமோகனன், மேலதிக அரசாங்க அதிபர் – காணி, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம், திரு கு. பிரபாகரமூர்த்தி, பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், மருதங்கேணி ஆகியோர் கலந்து கொண்;டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.