பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி விடுத்துள்ள ஊடக அறிக்கை

விவசாய இரசாயன வெற்றுப் போத்தல்கள் சேகரிக்கும் ஆரம்ப நிகழ்வும், வாகனப் பேரணியும் 24.02.2025 திங்கட்கிழமை  காலை 10 மணிக்கு திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
Crop life நிறுவனம் மற்றும் விவசாய நிறுவனங்களின் அனுசரணையுடன் பிரதி விவசாய பணிப்பாளர் – யாழ்ப்பாணம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பதிவாளர் – பீடைகொல்லி கட்டுபாட்டு பிரிவு, வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர் – ஆராய்ச்சி, உதவி ஆணையாளர் – கமநல அபிவிருத்தி திணைக்களம், பணிப்பாளர் – பயிர் வாழ்வு மற்றும் விவசாய சம்மேளன தலைவர்கள், முன்னோடி விவசாயிகளும் பங்குபற்றவுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு செய்தி அறிக்கையிடல் மேற்கொள்ள பிரதி விவசாயப் பணிப்பாளர் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.