அமரத்துவமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சோ.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு (01.02.2025) பிற்பகல் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஆளுநர், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களைக் கூறினார்.