இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2024

இலங்கையின் பொதுநிதிக் கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகளுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 02.12.2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு BMICH இன் B மண்டபத்தில் இடம்பெற்றது.

2023 ஆம் ஆண்டின் நிதிக்கணக்குகள் மற்றும் செயற்திறன் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இப் போட்டியானது தேசத்தில் பொது நிதிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு பங்களித்து, நிதி அறிக்கையிடலின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு இலங்கையின் பொதுத்துறை நிறுவனங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாக விளங்கும் இவ் விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஸ்ர ஆலோசகர் Mr. Duminda Hulangamuwa அவர்கள் கலந்து கொண்டதுடன் தலைவர், இலங்கை வர்த்தக சபை CA ஸ்ரீலங்காவின் தலைவர், உபதலைவர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அந்த வகையில் வடக்கு மாகாணம் அனைத்து மாகாணங்களிலும் சகல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டமைக்காக தங்கவிருதினையும் வடக்கு மாகாண சபை மற்றும் பிரதம செயலாளர் செயலகம், தங்கவிருதினையும் பிரதிப் பிரதம செயலாளர் செயலகம் (மாகாணத் திறைசேரி) வெண்கல பதக்கங்களை பெற்றுக்கொண்டதுடன் ஏனைய அமைச்சுக்கள் திணைக்களங்கள் 19 இணக்க சான்றிதழ்களையும் யாழ் மாநகர சபை நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளும் இணைந்து 28 இணக்க சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.