PIMD Lotus நிறுவனத்தினால் சிறார்களிற்கான ஆங்கில மொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு நடாத்தப்பட்டது

முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலை சிறார்களின் ஆங்கிலம் தொடர்பிலான எழுத்தாற்றல் வாசிப்பு மற்றும் இதர திறமைகளை மேம்படுத்தும் நோக்கோடு PIMD Lotus நிறுவனத்தினரால் ‘சிறார்களிற்கான ஆங்கிலமொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு’ எனும் தலைப்பிலான செயற்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 18.07.2024 திகதி அன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் PIMD Lotus அரச சார்பற்ற நிறுவன தலைவர், ஒருங்கிணைப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர் மாகாணக் கல்வித் திணைக்களம், உதவிக்கல்விப் பணிப்பாளர் -ஆங்கிலம், வலயக்கல்வி அலுவலகம் யாழ்ப்பாணம், உதவிக்கல்விப் பணிப்பாளர் -ஆங்கிலம், வலயக்கல்வி அலுவலகம், வலிகாமம், ஆகியோரும் பங்குபற்றினர்.