யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் சுமார் 30 வருடங்கள் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234.83 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன. கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பலாலி ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது குறித்த காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவித்து, அதற்கான ஆவணத்தை யாழ்ப்பாணம் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி கையளித்தார். இன்று விடுவிக்கப்பட்ட காணிகளை ஐந்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த முடியும். அதற்கமைய விவசாயிகளுக்கு தேவையான விதை பொருட்களும் கௌரவ ஜனாதிபதியால் விவசாயிகளுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவசமாக காணி வழங்கும் “உறுமய” விசேட வேலைத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 408 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள்  வழங்கப்படுகிறன. அதில் தெரிவு செய்யப்பட  பயனாளர்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் கௌரவ ஜனாதிபதியால் இன்றைய நிகழ்வின் போது வழங்கிவைக்கப்பட்டன.